முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை: ராகுல்காந்தி விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023-06-01

Source: provided

புதுடெல்லி : மக்களின் முக்கிய பிரச்சனைகள் கூட பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இல்லை என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை நேற்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர். 

முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பா.ஜ.க. விரும்பவில்லை.

இண்டியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது. அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி. இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை. 

இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து