முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளவங்கோடு இடைத்தேர்தல்: கூடுதல் நிர்வாகிகளை நியமித்தது காங்கிரஸ்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Congress 2023 01 25

Source: provided

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, பா.ஜ.க.வில் சேர்ந்ததை அடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, விளவங்கோடு இடைத்தேர்தல், தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தல் அன்றே நடைபெறுகிறது.  இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கையில், நடைபெறவுள்ள 2024 விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், கே.ஜி. ரமேஷ் குமார், எஸ். சதீஷ், எஸ். ஷாஜி, எபினேசர் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து