முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றது : ஆத்தூர் பிரச்சாரத்தில் எடப்பாடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சேலம் : தி.மு.க. ஆட்சியில்தான் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன என்று ஆத்தூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் பிரச்சார கூட்டம், அ.தி.மு.க. மாநில மாநாடுபோல் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க.வை விமர்சிக்கிறவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க இந்த பூமியில் யாரும் இன்னும் பிறக்கவில்லை. 

மக்கள் செல்வாக்கு, தெய்வ சக்தி படைத்த கட்சி அ.தி.மு.க. பொய் வழக்குகள் போட்டு கட்சி பணியை முடக்க பார்க்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்ககோரி போராடிய விவசாயிகளை சுட்டு வீழ்த்தியது தி.மு.க. 

தி.மு.க. ஆட்சியில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன. அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, விரும்பத்தகாத சம்பவத்தை உருவாக்கியது தி.மு.க. விவசாயிகளுக்கான திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கியுள்ளது. 

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர்  பொய் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரசும், தி.மு.க.வும்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது; அதனால்தான் திரும்ப திரும்ப பொய்யை பேசி உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார். 

தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அ.தி.மு.க. 

மதுரை எய்ம்ஸ் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து