முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் இந்திய தூதரகம் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. 

இஸ்ரேலில் உள்ளவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ளவும் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

+972-547520711, +972-543278392 ஆகிய உதவி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: [email protected]. இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கான இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி இந்திய தூதரகம் அந்நாட்டு இந்தியர்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அவர்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து