முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக தாயகம் திரும்பிய வீரர் : டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      விளையாட்டு
Delhi-Capitals 2024-03-23

Source: provided

புதுடெல்லி : 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டரும், ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மிட்செல் மார்ஷ் தசை நார் கிழிவிற்கு சிகிச்சை மேற்கொள்ள தாயகம் திரும்பி உள்ளார். காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாத மிட்செல் மார்ஷ் கடைசியாக ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

மிட்செல் மார்ஷ் மீண்டும் டெல்லி அணியுடன் இணைவது குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இது டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து