முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் இன்று ஓ.பி.எஸ்.சை ஆதரித்து ஜே.பி.நட்டா ரோடு ஷோ

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
Amit-Shah 2023-11-26

Source: provided

உதகை : பரமக்குடியில் இன்று ஓ.பி.எஸ்.சை ஆதரித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உதகையில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இன்று பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோவில் பங்கேற்கிறார். ஏற்கனவே, உதகையில் நேற்று முன்தினம் ரோடு ஷோ நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து