முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி கொள்ளை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
Chennai 2024-04-15

Source: provided

சென்னை : சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பட்ட பகலில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம்,  ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை.  இப்பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.  வழக்கம் போல நேற்று கடையில் பிரகாஷ் இருந்துள்ளார்.  இந்நிலையில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

பின்னர் அவரின் கை,  கால்களை கட்டி போட்டுவிட்டு, சுமார் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.  இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனை கொண்டு மிரட்டல் விடுத்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து