முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோமியோ விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Romeo-review 2024-04-16

Source: provided

திருமணமே பிடிக்காத கதாநாயகிக்கு திருமணத்திற்குப் பிறகு நாயகியை நாயகன் ஒன்சைடாக காதல் செய்து எப்படி கரெக்ட் செய்கிறார் என்ற கதைக் கருவை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். 

தன் குடும்பத்திற்காக வாங்கிய கடனை அடைக்க மலேசியா சென்று சம்பாதித்து அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி. இதனாலேயே அவருக்கு வயது முதிர்ந்து விடுகிறது. ஐடியில் வேலை செய்வதாக பொய் சொல்லிவிட்டு சினிமாவில் ஹீரோயினாக வர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர் மிருணாளினி..

இந்நிலையில், ஒரு மரண நிகழ்வில் நாயகி மிருணாளினியை பார்க்கும். விஜய் ஆண்டனிக்கு கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மிருணாளினியின் சுயரூபம் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகும் விஜய் ஆண்டனி மனைவியின் ஆசையை நிறைவேற்ற தானே ஒரு தயாரிப்பாளராக மாறுகிறார்.

இதையடுத்து மிருணாளினி பெரிய கதாநாயகியாக மாறினாரா, இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. விஜய் ஆண்டனி வழக்கம்போல் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறார். மிருணாளினி சிறப்பான நடிப்பைக் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பரத் தனசேகர் மற்றும் ரவி ராய்ஸ்டர் இசையில் பாடல்கள் வித்தியாசமான முயற்சியில் ரசிக்க வைத்திருக்கின்றன. மொத்தத்தில் ரோமியோ நல்ல என்டர்டைன்மென்ட் படமாக அமைந்திருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து