முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ். போன்ற தலைவர் டெல்லிக்கு தேவை: பரமக்குடியில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார் ஜே.பி.நட்டா

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
JP-Natta 2024-04-16

Source: provided

பரமக்குடி : ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடியில் நேற்று (ஏப். 16) ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பரமக்குடியில் நடைபெற்ற ரோடுஷோ அவருடன் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி எம்பி ரவீந்திரநாத்தும் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். கையில் பலாப்பழம் சின்னம் பொறித்த பதாகையை கையில் ஏந்தியபடி ஜே.பி.நட்டா திறந்த வாகனத்தில் நின்று கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

இந்த பேரணியின் போது ஜே.பி.நட்டா பேசியதாவது,  “ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாற்ற வேண்டும். அதை அடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். பிரதமர் மோடியின் எழுச்சிமிகு தலைமையின் கீழ், கிராமப்புறங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து