எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : தடை உத்தரவை மீறி பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பாபா ராம்தேவ் கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட் இது குறித்து பதிலளிக்க அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே, இந்த விவகாரத்தில் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தாயார் என தெரிவித்ததை சுப்ரீம் கோர்ட் கடந்தமுறை நிராகரித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகி பால கிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றத்திற்காக கைகூப்பி மன்னிப்பு கேட்டனர். மேலும் ஊடகங்களில் தங்கள் நடத்தைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தனர். இந்த வழக்கை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் பாபா ராம்தேவ் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025