முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. 

இந்த சேவை டிக்கெட்டுகளை வரும் 20-ம்  தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு லக்கி டிப்பில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம். 

இதே போல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவா டிக்கெட்டுகள் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஜூலை மாத ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அங்க பிரதடசணத்திற்கான டோக்கன்கள் 23-ம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது.முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ம் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு வெளியிடப்படுகிறது.  ஸ்ரீவாரி சேவை ஒதுக்கீடு 27-ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து