முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      சினிமா
Mansoo-Alikhan-

Source: provided

வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் நேற்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து