முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      இந்தியா
Amit-Shah 2

ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். முன்னதாக நேற்று தனது காந்திநகர் தொகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவருக்கு தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்று முதல்கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

இந்த நிலையில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 7-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடுகிறார். 

கடந்த தேர்தலில் சுமார் 5 லட்சம் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு முன்னதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டு வென்றிருந்தார். இந்த நிலையில் காந்திநகர் தொகுதியில் இன்று  அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து நேற்று காந்திநகரில் ரோடு ஷோ நடத்திய அமித்ஷாவுக்கு தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து