முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
Elections 2024-04-01

சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார். 

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). டிசைனிங் இன்ஜினியராக பணி புரியும் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கே தற்போது வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வருகிறார்.

தமிழகத்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதி வாக்காளராக அவர் தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக ஜப்பானிலிருந்து விமானம் மூலம் கடந்த 11-ஆம் தேதி சேலத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் விமானத்தில் வந்த வகையில் ஒரு ஓட்டுப் போடுவதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைச் செலவு செய்து ஜனநாயக கடமையாற்றச் சேலம் கொண்டலாம்பட்டி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில், விஜய் ஒரு ஓட்டுப் போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதைப் போன்று சங்கரும் ஜப்பானிலிருந்து சேலத்திற்கு ஓட்டுப் போட வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து