முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-04-19

Source: provided

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது.  இந்த தேர்தலையொட்டி காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.

வாக்களித்தபின் முதல்வர்  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  

மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல இந்தியாவுக்கே வெற்றிதான். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து