முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-04-19

Source: provided

சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர்  மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது பாராளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள்,  வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தினர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்களித்தார்.  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,   “வாக்குரிமை உள்ள அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.  நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான்” என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து