முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Rahul-Gandhi 2023 03 30

Source: provided

புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு நெருங்கி விட்டது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வும் கடுமையாக இருக்கிறது. ஆனால் அனைத்தும் நன்றாக இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். 

அவர், பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப பல்வேறு உக்திகளை தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால், அவரது பொய்களுக்கான முடிவு நெருங்கி விட்டது. இவ்வாறு அந்த  பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பிரதமர் பல விஷயங்களில் வெறுப்பு மொழியில் பேசுகிறார்.  ஒரு எளிய கேள்விக்கும் அவர் பதிலளிக்க வேண்டும். 1951 முதல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களின் உண்மையான தரவுகளை வெளிப்படுத்துகிறது. 

ஆனால் இது வரை கணக்கெடுப்பு செய்யவில்லை. இது அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிக்கும் சதி என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னதாக நேற்று முன்தினம், ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய கறையான்களை பரப்பி, நாட்டை வெறுமையாக்கியது காங்கிரஸ். 

இன்று ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளது. அக்கட்சி தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகிறது. காங்கிரசின் மிக மோசமான நிலைமைக்கு அக்கட்சியே பொறுப்பு. 

ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற அக்கட்சியால், இப்போது 300 தொகுதிகளில்கூட சுயமாகப் போட்டியிட முடியவில்லை. வேட்பாளர்களே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து