எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது. மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று முன்தினம் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர். மீனாட்சி அம்மனுக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டதும் அங்கு கூடி யிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன் றவையும் நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
நேற்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை-சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி - அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர்.
தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி - சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். சுவாமி - அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர்.
பகல் 11.30 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர். தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வந்தனர்
அதை தொடர்ந்து உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
திருச்சியில் கட்டுமான பணியின் போது முருகன் கோவில் வளைவு சரிந்து விபத்து
06 Feb 2025திருச்சி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
-
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா - இஸ்ரேல் விலகல்
06 Feb 2025வாஷிங்டன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கனவே டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.
-
ஓய்வு பெறுவது எப்போது? நிருபர்களின் கேள்வியால் கேப்டன் ரோகித் ஆத்திரம்
06 Feb 2025நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...
-
மத்தியப் பிரதேசத்தில் இந்திய போர் பயிற்சி விமானம் விபத்து
06 Feb 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
06 Feb 2025அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்
-
இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? காங்கிரஸ் எம்.பி. ரன்தீப்சிங் கேள்வி
06 Feb 2025புதுடில்லி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி.
-
இங்கி.க்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ப
-
நெல்லையில் புதிய சூரிய மின் உற்பத்தி ஆலைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
06 Feb 2025நெல்லை, நெல்லையில் ரூ.6,874 கோடி மதிப்பில் டாடா மற்றும் விக்ரம் நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
-
அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் ஹர்ஷித் ராணா புதிய சாதனை
06 Feb 2025நாக்பூர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷித் ராணா சாதனை படைத்துள்ளார்.
-
12ம் தேதி வரை வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல்
06 Feb 2025சென்னை, தமிழகத்தில் 12ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
மீண்டும் சொதப்பிய ரோகித்
06 Feb 2025இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி? கேப்டன் ரோகித் சர்மா பதில்
06 Feb 2025நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
-
ஜனாதிபதியுடன் சச்சின் சந்திப்பு
06 Feb 2025புதுடில்லி, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-02-2025.
06 Feb 2025 -
தனது பெயரை எடேர்னல் என மாற்றிய சொமாட்டோ நிறுவனம்
06 Feb 2025மும்பை, உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்வு
06 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்
-
சென்னையில் வரி வசூலை அதிகரிக்க புதிய திட்டம்
06 Feb 2025சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ள இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அப்படி நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எ
-
திருப்பூர் அருகே விபத்தில் 2 பேர் பலி
06 Feb 2025திருப்பூர் : திருப்பூர் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவாரா? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Feb 2025சென்னை, மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது: த.வெ.க. தலைவர் விஜய்
06 Feb 2025சென்னை, சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
பள்ளி மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
06 Feb 2025சென்னை, போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெ
-
இந்தியர்களுக்கு கை விலங்கு போட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
06 Feb 2025புதுடெல்லி, அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக
-
கைவிலங்கு போடப்பட்ட விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
06 Feb 2025புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
06 Feb 2025மதுரை, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.