முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      விளையாட்டு
IPL 2024-01-20

Source: provided

மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.

கொல்கத்தா வெற்றி...

ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இதையடுத்து இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

பிளே ஆப் சுற்றுக்கு... 

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விகுறியாகி உள்ளது. இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களில் ஆடிய பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் மற்றும் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரனுக்கு பி.சி.சி.ஐ அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

50 சதவீதம் அபராதம்... 

இதன் காரணமாக பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மறுபுறம் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரனுக்கு ஐ.பி.எல் நடத்தை விதிகளின் பிரிவு 2.8 இன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டியதை அடுத்து அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தை சாம் கர்ரன் ஒப்புக்கொண்டதாகவும், அபராதம் விதித்ததை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து