எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.
37 லீக் போட்டி...
ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.
ஹர்ப்ரீத் ப்ரார்...
இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை பறிகொடித்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியாக விளையாடினார்கள்.
143 ரன் இலக்கு...
அப்போது ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாஹா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் களத்துக்கு வந்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். அவரை லிவிங்ஸ்டன் வெளியேற்றினார். தொடர்ந்து மில்லர், சாய் சுதர்ஷன், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
குஜராத் வெற்றி...
சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்களை கைபற்றினார். ஷாருக் மற்றும் ரஷித் கானை அவர் அவுட் செய்தார். 19.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்காக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்கள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்கள், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் வென்றார்.
சுப்மன் கில் பேட்டி...
வெற்றி பெற்ற பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம். ஆனால் போட்டி மைதானத்தின் தன்மை காரணமாக கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. கேப்டன்சி செய்வது உண்மையிலேயே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். பேட்டிங் செய்யும் போது கேப்டன்சி பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சரியான பங்களிப்பினாலே இந்த வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
சாம் கர்ரன் பேட்டி...
தோல்வி அடைந்த பின்னர் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களுடைய அணி வீரர்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கிறேன். குஜராத் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர், சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தில் நாம் 160 - 170 ரன்கள் அடித்திருந்தால் வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். மேலும் நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழக்கின்றோம். அதுவே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. என்ன செய்தால் இதை தடுக்க முடியும் என்று தெரிய வேண்டும். ஐ.பி.எல் போன்ற தொடர்களில் இது போன்று தொடர்ந்து போட்டிகளை தோற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
எம்.என்.ராஜம்- எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Feb 2026சென்னை, தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி
-
சட்டப்பேரையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
16 Feb 2026சென்னை, சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப். 21ல் கனமழை பெய்ய வாய்ப்பு
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் வரும் பிப்.
-
இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்
16 Feb 2026நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
-
தமிழ்நாட்டில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
-
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்
16 Feb 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
16 Feb 2026அமராவதி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ரூ.542.02 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Feb 2026சென்னை, ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர்
16 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தென்காசி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் இணைந்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
16 Feb 2026திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இ
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
16 Feb 2026புதுச்சேரி, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது ஏப.7 முதல் விசாரணை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு
16 Feb 2026புதுடெல்லி, சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் த
-
சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு
16 Feb 2026கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
-
ஏ.ஐ. உச்சி மாநாட்டை நடத்த இந்தியா மிக சரியான இடம்: ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு
16 Feb 2026நியூயார்க், உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாள
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: இந்திய தேர்தல் ஆணையம் நூதன முறையில் பிரச்சாரம்
16 Feb 2026டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க மருந்தடிக்கவும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யவும், காய்
-
புது டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு தொடக்கம்: ஏ.ஐ. வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
16 Feb 2026புது டெல்லி, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ஏ.ஐ.
-
இன்றைய நாள் எப்படி?
16 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Feb 2026- ஶ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமானுக்கு திருக்கல்யாணம்.
- நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் லட்ச தீபம்.


