முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      சினிமா
Coolie-2024-04-23

சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கத்திலான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ’ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ரஜினிகாந்த் ‘தலைவர் 171, படத்துக்காக கைக்கோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. ரசிகர்களிடையே ரஜினி – லோகேஷ் கூட்டணி குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தற்போது ’வேட்டையன்’ பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தலைவர் 171 படத்துக்கான டைட்டில் டீசர் நேற்று முன்தினம் (ஏப். 22) மாலை வெளியிடப்பட்டது. அந்த டீசரில் படத்தின் டைட்டில் ’கூலி’ என அறிவிக்கப்பட்டது. தங்கம் தொடர்பான வாட்ச் உள்ளிட்ட பொருட்களுடன் நிழலான தொழிலில் ஈடுபட்டிருக்கும் மர்ம கும்பல் மத்தியில் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுப்பதும், பஞ்ச் டயலாக்ஸ் மத்தியில் அடியாட்களை அதகளம் செய்வதும் டீசராக இடம்பெற்றுள்ளது.

இந்த டீசர் வெளியான ஓரிரு மணி நேரத்தில் 20 லட்சம் பார்வைகளை கடந்தது “கூலி” திரைப்படத்தின் டீசர் வெளியாகி 17 மணிநேரம் ஆன நிலையில், தற்போது வரை 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து