முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      தமிழகம்
Tairn 2023-05-25

சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன.  மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் சுத்தம் செய்ய வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்தவாறு உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.  இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார்,  பெண்ணின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து