முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      விளையாட்டு
Sahal-2024-04-23

ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.

38-வது லீக் போட்டி...

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் பந்துவீச்சாளர்... 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சஹால் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்துள்ளார். யுஸ்வேந்திர சஹால்க்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வீரராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து