முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      விளையாட்டு
Rajasthan-Royals-2024-04-23

இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை பேட்டிங்...

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று (ஏப். 22) நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது  இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

திலக் வர்மா... 

ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் திணறினர். ரோஹித் சர்மா 6ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மட்டும்  நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த வீரரான நேஹல் வதேரா 49ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

180 ரன்கள் இலக்கு...

20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்கள் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களை  விளாசினார். நேஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார். இதையடுத்து,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 18. 4 ஓவர்களில்  1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை விளாசினர். அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். ஜோஸ் புட்டலர் 25 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

தொடர்ந்து முதலிடம்....

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஏழு போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 3போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6புள்ளிகளைப் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

சஞ்சு சாம்சன் பேட்டி...

வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது.,  இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான அனைத்து வாழ்த்துகளும் எங்கள் அணியின் அனைத்து வீரர்களையுமே சேரும். பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மிடில் ஓவர்களில் இடது கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திவிட்டனர். ஆனால் நாங்கள் திரும்பி வந்ததுடன் இந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளோம்.

ஓய்வு கிடைக்கும்... 

நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது மைதானம் மெதுவாக இருந்தாலும், விளக்குகளின் வெளிச்சத்தால் விளையாடும் போது அது பேட்டிங்கிற்கு சாதமாக அமைந்தது. தொழில்முறை வீரர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்தும் அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான வீரர். இவ்வாறு அவர் கூறினார். 

ஹர்திக் பாண்ட்யா...

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் மும்பை கேப்டன் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.ஆனால் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார்கள். எனினும் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங்கை முடிக்கவில்லை குறைந்தது. 10 - 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்கு குறி வைத்து பந்து வீசி இருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்கு தெரியும்.

உடன்பாடு இல்லை...

 

நாங்கள் செய்யும் தவறிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும். திரும்ப செய்யக்கூடாது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கிறது. அது குறித்து அவர்கள் உழைக்க வேண்டும். எங்கள் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.ஆனால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்துதான் கவனம் செலுத்துகிறோம். எங்கள் அணியில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து