முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Priyanka-Gandhi 2023-06-08

திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை  திருப்புவதே பா.ஜ.க. தலைவர்களின் பாணி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது,

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிவேகமாக உயர்ந்துள்ளது. அதே போன்று வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. ஆனால், பிரதமர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை.

பா.ஜ.க.வினர் வளர்ச்சியைப் பற்றி பேச மாட்டார்கள். அவர்கள் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேச மாட்டார்கள். மாறாக, பா.ஜ.க. தலைவர்கள் மக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பிரச்சினைகளை கொண்டு வருவார்கள். 

அதாவது, உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து