முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      விளையாட்டு
CSK team 2024-03-27

Source: provided

சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.

46வது லீக் ஆட்டம்...

ஐ.பி.எல் தொடரில் சென்னையில் ஞாயிரன்று நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்னும், டேரில் மிட்செல் 52 ரன்னும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

213 ரன்கள் இலக்கு...

இதையடுத்து 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஹெட் 13 ரன் மற்றும் அபிஷேக் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் டக் அவுட் ஆனார்.

134 ரன்களில் அவுட்...

இதையடுத்து எய்டன் மார்க்ரெம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நிதிஷ் ரெட்டி 15 ரன்னிலும், மார்க்ரம் 32 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய கிளாசென் 20 ரன்னிலும், அப்துல் சமத் 19 ரன்னிலும், ஷபாஸ் அகமது 7 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 32 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

வெற்றி குறித்து...

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நன்றாக உணர்கிறேன். ஈரப்பதமான சூழ்நிலைகளில் 70+ ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நல்ல செயல்பாடு. டாஸ் கிடைக்காதது ஆசீர்வாதமாக அமைந்தது. சதத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. 220+ ரன்கள் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும் கடைசி நேரத்தில் 4 - 5 ஷாட்டுகளை தவற விட்டது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இன்னிங்ஸ் இடைவெளியின் போது அது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துமோ என்று நினைத்து அப்செட்டானேன். நல்லவேளையாக இந்த இலக்கே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது.

சில தவறுகள்... 

கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகள் செய்தோம். ஆனால் இப்போட்டியில் எங்கள் பீல்டிங் நன்றாக இருந்தது. இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வெற்றிக்கான ஸ்கோர் எது என்று தெரிவதில்லை. எனவே எப்போதும் நீங்கள் 20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்க வேண்டும். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தால் எதிரணியை பின்னோக்கி நடக்க வைக்கலாம். இன்று அதை செய்த தேஷ்பாண்டேவின் கடின உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது. அதே போல ஈரப்பதமான சூழ்நிலையில் ஜடேஜா 22 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல முடியாது. எனவே நீங்கள் இருக்கையின் பின்னாடி அமர்ந்து கொண்டு அவர்களது வேலையை செய்ய விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து....

போட்டிக்குப்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மினஸ் கூறியதாவது:- டி20 கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். தற்போது இந்த ஐபிஎல் தொடரில் முற்றிலும் புதிய லெவலுக்கு சென்றுள்ளது. இந்த லெவலை அமைக்கும்போது, நாம் உண்மையிலேயே ஆக்ரோஷமாக விளையாடும் சில வீரர்களை பெற்றிருந்தால், அதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும், தொடரில் வெற்றி பெற முடியும்.

சவாலானதாக... 

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சு ஆப்சனை பெறவில்லை. பந்து ஸ்விங் ஆகும் வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. ஆடுகளமும் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் முயற்சி செய்வதும், குறைந்த ரன்கள் கொடுக்க முயற்சிப்பதும் விக்கெட் எடுப்பதற்கு சிறந்த வழி. பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதேவேளையில் 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். நாங்கள் சேஸிங் செய்யும் வகையில் நன்றாக தயாராகி இருந்தோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சிறந்த வகையில் அமையவில்லை. அந்த விசயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து