முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி: உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பில் தான் உடல் உறுதி பெறும். 

ரா.முத்தரசன்: உலகத் தொழிலாளர் உரிமை தினமான மே தினம். உலகின் மிகப் பெரும் ஜனநாயக அமைப்புக்கான நாட்டின் தேர்தல் திருவிழாவுடன் இணைந்து வருகிறது. வகுப்புவாத, சனாதன பாசிச சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற பாராளுமன்ற தேர்தல் களம் வாய்பளித்துள்ளது. அதிபயங்கர ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம். வகுப்புவாத, பாசிச சக்திகளை தோற்கடிப்போம்.

ராமதாஸ்: பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்: உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.  இவ்வாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து