முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Cauvery 2023 08 11

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும் 

தண்ணீர் திறக்க முடியாது என்று ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கிறார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நிலுவையில் உள்ள 95 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க முடியாது கர்நாடகா திட்டவட்டமாக கூறியுள்ளது. மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து