முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் விஜய் யின் “ரெட்ட தல”

வியாழக்கிழமை, 2 மே 2024      சினிமா
Arun-Vijay 2024-05-02

Source: provided

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…

ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகப் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். மனோஜ் பினோ என் நண்பர், சினிமா மீது தீவிரக் காதல் கொண்டவர். வெற்றிப் பெற வாழ்த்துக்கள். என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். சாம் சி எஸ் உடன் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், அவருக்கு வாழ்த்துகள். சித்தி இத்னானிக்கும் மற்றும் என்னுடன் வேலைப் பார்த்த தான்யாவிற்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து