முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்னம் விமர்சனம்

வியாழக்கிழமை, 2 மே 2024      சினிமா
Ratnam-Review 2024-05-02

Source: provided

சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகிறார். இதற்கிடையே நாயகி பிரியா பவானி சங்கரை முதல் முறையாக பார்க்கும் விஷால், அவரை பின் தொடர்கிறார். அப்போது ஒரு கும்பல் பிரியா பவானி சங்கரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து அவரை காப்பாற்றும் விஷால், அந்த கும்பல் யார்?, எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, என்பதை தெரிந்துக்கொள்கிறார். பிறகு என்ன, பிரியா பவானி சங்கரின் பிரச்சனையை தனது பிரச்சனையாக கையில் எடுத்து, எதிரிகளை வீழ்த்த கிளம்புகிறார். அதன் பிறகு நடப்பதை தனது வழக்கமான வேகமான காட்சிகளைக் கொண்டு கதை சொல்லியிருக்கும் இயக்குநர் ஹரி, திருப்புமுனை ஒன்றின் மூலம் கூடுதல் சுவாரஸ்யத்தோடு படத்தை நகர்த்தி செல்வது தான் ‘ரத்னம்’

முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கும் விஷால், ரத்னமாக இரத்த குளத்தில் நீந்தி இருக்கிறார். புயலை விட வேகமாக பயணித்திருக்கும் விஷால் கடுமையாக உழைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. 

இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலான கதையை, அதே வழக்கமான கமர்ஷியலோடும், வேகத்தோடும் சொல்லியிருந்தாலும், நாயகன் - நாயகி இடையில் வித்தியாசமான திருப்பத்தை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

மொத்தத்தில் இந்த ரத்தினம் அனைவராலும் கவர்ந்திழுகாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து