முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      உலகம்
Singapore 2024-05-14

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ இன்று (15-ம் தேதி) பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் இன்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பெயர்களை அவர் அறிவித்தார். இதில் முந்தைய அமைச்சரவையில் துணை மந்திரிகளாக இருந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 

தற்போது அமைச்சர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோர் புதிய அமைச்சரவையிலும் தொடர்வார்கள் என லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து