முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      தமிழகம்
Chavku-Shankar 2024-05-06

Source: provided

கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து