முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
INDIA 2024-05-15

Source: provided

 புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது. 

ஈரானின் சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், ஈரானில் முதலீடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியிருந்தது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: 

சபஹார் துறைமுகம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை பார்த்தேன். இந்த திட்டம் அனைவரின் நலனுக்கானது என்பதை புரிய வைக்க முடியுமா, ஏற்றுக் கொள்வார்களா என்பது எனது கேள்வி. இதனை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

அமெரிக்கா கடந்த காலங்களில் தடை விதித்தது இல்லை. சபஹாருக்கு துறைமுகத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக, கடந்த காலங்களில் அமெரிக்கா கூறியிருந்தது. அதனை நாங்கள் செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், 

கடந்த 70 அல்லது 80 ஆண்டுகள் வரை மேற்கத்திய நாடுகள் உலகளவில் ஆதிக்கம் செய்து வந்தன. ஆனால், அந்நாடுகள், 200 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியதாக நினைத்துக் கொண்டுள்ளன. அந்த நிலையில் இருப்பவர்கள் தங்களின் பழைய பழக்கத்தை மாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

தங்கள் தேர்தல் முடிவுகளை முடிவு செய்ய நீதிமன்றத்தை நாடியவர்கள். தற்போது, எப்படி தேர்தல் நடத்த வேண்டும் என இந்தியாவுக்கு பாடம் நடத்துகின்றனர். இந்தியா எப்படி இருக்க வேண்டும் என பிம்பத்தை உருவாக்கியவர்கள், அப்படி இந்தியா இல்லை என்பதை பார்க்கிறார்கள்.

மேற்கத்திய ஊடகங்கள், நாட்டில் உள்ள சில வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஆதரிக்கின்றன. அவர்கள் தங்களது அடையாளத்தை மறைப்பது இல்லை. ஆனால், அவர்கள் உங்களின் நற்பெயரை சேதப்படுத்தி வீழ்த்தவும் செய்வார்கள். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து