முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார்: த.வெ.க. தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் புகழாரம்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Senkottaiyan1-2025-11-27

சென்னை, தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய் என்று த.வெ.க.வில் இணைந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

அ.தி.மு.க.வில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அ.தி.மு.க. உருவான போது எம்.ஜி.ஆர். உடன் சென்றவன் நான். புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன் . அ.தி.மு.க. மீண்டும் ஒன்றனைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் .அது நடக்கவில்லை.என்னை திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி. நான் த.வெ.க.வில் இணைந்ததற்கு காரணம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்.

நேர்மையான ஆட்சியை கொடுக்க ஒருவர் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் . தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைவதற்காகவே தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தேன். த.வெ.க.வுக்கு வெற்றியை தர மக்கள் தயராக இருக்கிறார்கள் . 2026-ம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும்.சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார். மக்கள் மனதில் விஜய் இடம் பெற்றுவிட்டார். பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் அப்பா, அம்மா விஜய்க்கு ஓட்டு அளியுங்கள் என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாவுவை நான் சந்திக்கவே இல்லை; தி.மு.க.வில் இருந்தோ, பா.ஜ.க.வில் இருந்தோ யாரும் என்னை அணுகவில்லை.தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல. என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து