முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
Senthil-Balaji 2023-10-19

Source: provided

புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது. 

ஜாமீன் வழங்க கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை மே 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற அமலக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து