முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
Madhavi 2024-05-15

Source: provided

புதுடெல்லி : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா கடந்த 3 மாதங்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே சிந்தியா சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.28 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற உள்ளன. 

நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த மாதவி ராஜே, மூத்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதவி ராஜே சிந்தியா பல்வேறு தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து