முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: ஆந்திராவில் 6 பேர் உடல் கருகி பலி

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
Andhra 2024-05-15

Source: provided

அமராவதி : ஆந்திராவில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர். 

பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது. 

அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் தீயில் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து