முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

புதன்கிழமை, 15 மே 2024      தமிழகம்
Metro 2024-01--02

Source: provided

சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 

2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் மீனம்பாக்கம் - விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே நேற்று அதிகாலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் ஆலந்தூர் - விமான நிலையம் இடையே சேவை முடங்கியது. 

காலை முதல் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில், மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு தற்போது  சரி செய்யப்பட்டுள்ளது.  சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நேரடி மெட்ரோ சேவை மீண்டும் துவங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து