முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
Rajasthan 2024-05-15

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ளது இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம். இதன் சுரங்கத்தை ஆய்வு செய்ய கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை வந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு அன்றையதினம் இரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வர முற்பட்டது. அப்போது லிஃப்ட்டின் ஒரு சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்தது. இதில் லிஃப்ட் கீழே விழுந்தது, இந்த விபத்தில் லிஃப்டில் இருந்த 15 பேரும் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக காவல் துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 12 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இவர்களில் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மீட்புக் குழு உறுதி செய்தது.

பின்னர் அறுந்து விழுந்த லிஃப்ட் அருகே ஏணியைக் கொண்டு சென்று அதன் வழியாக சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் லிஃப்ட் கயிறு கட்டி இழுக்கப்பட்டது. 15 பேரில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து