முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை

புதன்கிழமை, 15 மே 2024      தமிழகம்
NLY 2024-05-15

Source: provided

சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட அரசு விரைவுப்பேருந்து நேற்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து பேருந்தை பணிமனை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து விரைவு போக்குவரத்து கழக மேலாளர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து பாளையங்கோட்டை ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து