முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறையினர் பாராட்டு

சனிக்கிழமை, 18 மே 2024      உலகம்
Dubai 2024-05-18

Source: provided

 துபாய் : சுற்றுலா பயணியின் கைக்கெடிகாரத்தை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

துபாயில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்த பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவவும் ஸ்மார்ட் காவல் நிலையம் என்ற ஆன்லைன் சேவையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சிறுவன் முகமது அயன் யூனிஸ் உலாவிய போது விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வழியில் கண்டான். உடனே ஸ்மார்ட் காவல் நிலையம் இணையதளத்தில் இது குறித்து பதிவிட்டான். 

இதையடுத்து, துபாய் காவல் துறை அதிகாரிகள் முகமது அயனிடமிருந்து கைக்கடிகாரத்தை பெற்றுக் கொண்டனர். அதனை துபாய்க்குச் சுற்றுலா வந்த போதுதொலைத்த பயணிக்கு அனுப்பி வைத்தனர்.  

இது குறித்து துபாய் சுற்றுலா காவல்துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நேர்மைக்கு முன்னுதாரணமாக விளங்கிய இந்திய சிறுவன் முகமது அயன் யூனிஸை துபாய் போலீஸ் மனதார பாராட்டி கவுரவிக்கிறது என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து