முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்

சனிக்கிழமை, 18 மே 2024      சினிமா
Satyaraj 2023-08-28

Source: provided

சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமா  நடிகர்களுள் சத்யராஜ் முக்கியமானவர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ்  இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இது முதல்முறையல்ல. 2019-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் முதலில் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கினார். ஆனால் அந்த திரைப்படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

ஆனால் சத்யராஜ் நடிக்கும் படம் ஒரு பான் இந்தியன் படமாக உருவாகவுள்ளது,  இந்தாண்டுக்கு படப்பிடிப்பு பணி தொடங்கப்படும் என நம்பப்படுகிறது.  படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து