முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நிறுவன ராக்கெட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்: ஆந்திராவைச் சேர்ந்தவர்

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
First-Indian-space

புதுடெல்லி, விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை, ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா என்பவர் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் 'நியூ ஷெப்பர்ட்-25 (என்எஸ்-25) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 6 பேர் கொண்ட ஒரு குழு, சுற்றுலாப் பயணிகளாக விண்வெளிக்கு சென்றனர். இந்த ராக்கெட் மேற்கு டெக்சாஸில் உள்ள ஒரு தனியார் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கிளம்பியது. இதில் கோபிசந்த் தோட்டகுராவும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றார்.

ஏற்கனவே இந்தியர்கள் பலரும் விண்வெளிக்குச் சென்றுள்ள போதிலும், விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை தோட்டகுரா பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்து விமானத்தில் பயணம் செய்வதில், கோபிசந்த் தோட்டகுராவுக்கு ஆர்வம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் எம்ப்ரி- ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.

ப்ளூ ஆரிஜின் விண்கலம் 6 பயணிகளை வெற்றிகரமாக விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பியுள்ளது. தோட்டகுராவை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து