முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவம்: ஐடி ஊழியரின் மனைவி தற்கொலை : கோவை அருகே பரிதாபம்

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

சென்னை : பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37).  இவர் சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.

ரம்யாவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் காரமடை. வெங்கடேசும், ரம்யாவும் ஐ.டி. நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் அவர்கள் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து பால்கனி கூரையில் 7 மாத பெண் குழந்தை திடீரென தவறி விழுந்தது. குழந்தை அங்கிருந்து நழுவி கீழே விழுந்து விடும் அபாயம் இருப்பதை கண்டு, அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக குழந்தையை மீட்டனர். திரைப்பட காட்சிகளை போல அரங்கேறிய இந்த சம்பவம் அப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் காரமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து ரம்யா தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரம்யா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து