முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      உலகம்
Salman 2024 05 21

 துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா நாட்டு மன்னராக கடந்த 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் சல்மான்(88). வயதாகி விட்டதால் தனது மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசராக மன்னர் நியமித்துள்ளார். 

மன்னர் சல்மானுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜெட்டா அல்சலாம் அரண்மனையில் உள்ள ராயல் கிளினிக்கில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதில், மன்னருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து