முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலில் தசை நார் வலி: அறுவை சிகிச்சை செய்ய விரைவில் லண்டன் செல்கிறார் எம்.எஸ்.டோனி?

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      விளையாட்டு
Dhoni 2023-10-03

Source: provided

சென்னை : காலில் அறுவை சிகிச்சை செய்ய டோனி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தோல்வி...

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியை கடந்த 18-ம் தேதி விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. பெங்களூரு அணியினர் டோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது.

கால் தசை வலிக்கு...

இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். அவர் முடிவு எடுக்க நாங்கள் நேரம் கொடுப்போம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், டோனி கால் தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் எனவும் அதன்பின்னர் டோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து யோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து