முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியாணாவில் பிரசாரத்தின் போது டெம்போ வேனில் பயணித்த ராகுல்

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

Source: provided

சண்டிகர்:அரியாணா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெம்போ வேனில் பயணம் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டத் தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஆறாம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் மே 25- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தெலங்கானாவில் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, " தேர்தல் அறிவித்ததில் இருந்து அதானி, அம்பானி குறித்து விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது. அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் அவர்களிடம் எவ்வளவு டீல் பேசியது" என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, '' காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியது பிரதமர் மோடிக்கு எப்படி தெரியும்? முன் அனுபவம் எதும் உண்டா? காங்கிரஸ் பணம் வாங்கி இருந்தால், அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை அனுப்பி சோதனை செய்யுங்கள்'' என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், அரியாணா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற ராகுல் காந்தி, டெம்போ வேனில் பயணம் செய்தார். இந்த வேனில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ராகுலுடன் பயணம் செய்தனர். ராகுலுடன் அவர்கள் உரையாடும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், '' மோடியின் டெம்போ நியாயமற்றது. எங்கள் டெம்போ நியாயமானது'' என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து