முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூத் முகவர்களை கைது செய்ததால் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Megabooba-Mufti 2023-12-17

ஸ்ரீநகர், தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றஞ்சாட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் தொகுதியில் நேற்று தேர்தல் நடைபெற்றது.  இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி களம் காண்கிறார். 

இந்நிலையில், மெகபூபா அனந்தநாக் தொகுதியில் தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். 

போலீசாரின் அத்துமீறலை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து