முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘கூகுள் மேப்’-ஆல் வந்த வினை: கேரளாவில் கால்வாய்க்குள் விழுந்த கார்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Car-2024-05-25

திருவனந்தபுரம், கேரளாவிற்கு கூகுள் மேப்பின் உதவியுடன் வந்த 4 பேர் காரை கால்வாய்க்குள் விட்ட நிலையில்,  காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டனர்.  

உலகில் பல லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று கூகுள் மேப்.  நமக்கு தெரியாத இடங்களுக்கு செல்லும்போது இதனைப் பயன்படுத்தி நாம் பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.  சுற்றுலா செல்பவர்கள் அதிகமாக கூகுள் மேப்பை பயன்படுத்தியே பயணங்களை மேற்கொள்கின்றனர்.  ஆனால்,  சமீப காலமாகவே கூகுள் மேப்பை பார்த்து செல்லும் வாகனங்கள் பல விபத்துக்குள்ளாகும் செய்திகள் அதிகமாகி வருகின்றன.

அந்த வரிசையில் நேற்று ஐதராபாத்தில் இருந்து ஒரு பெண் உட்பட 4 பேர் கேரளாவின் ஆலப்புழாவிற்கு சுற்றுலா சென்றனர்.  அவர்கள் சென்ற சாலை  கனமழையால் மூடியதால் வழி தெரியாமல் கூகுள் மேப்பை பார்த்துள்ளனர்.  கூகுள் மேப்பை பார்த்து சென்ற அவர்கள் அங்குள்ள கால்வாய்க்குள் காரை விட்டுள்ளனர்.  பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியால் நால்வரும் மீட்கப்பட்டனர்.  ஆனால் அவர்கள் வந்த காரானது நீரில் மூழ்கியது.  பின்னர் காவல்துறை வந்து மீட்டனர். கேரளாவில் கடந்த ஆண்டும் கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற கார்,  ஆற்றுக்குள் பாய்ந்ததில் 2 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து