முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிமால் புயல்: கொல்கத்தாவில் இருந்து 394 விமானங்கள் இயங்காது என அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      இந்தியா
Air

Source: provided

கொல்கத்தா : ரிமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 394 விமானங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள ரிமால் புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அதி தீவிரப்புயலாக மேலும் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் வங்காள தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையில் சாகர் தீவு, கேபபுரா இடையே  கரையை கடக்கக்கூடும் என்று தெரிவித்துள்ள நிலையில்,  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

நண்பகல் முதல் 21 மணி நேரத்துக்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டடுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு செல்லும் 394 விமானங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து